மதுரை: புதுக்கோட்டையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உயர்நீதி மன்றம் மதுரை கிளையும் உறுதி செய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தை சேர்ந்த சாமிவேல் என்கிற ராஜா என்பவர், கடந்த ஆண்டு (2020) ஏம்பல் பகுதியில், 7வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சாமிவேல் ராஜா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். அவர்மீதான வழக்கின் விசாரணையைத்ர தொடர்ந்து, புதுக்கோட்டை நீதிமன்றம், அவருக்கு  தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது.

தூக்கு தண்டனையை எதிர்த்து சாமிவேல் தரப்பில்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பில் குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, குற்றவாளிக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை சரிதான் என்றும், அதனை உறுதிப்படுத்துமாறும், உரிய ஆவணங்களையும் ஆதாரங்களையும் எடுத்து வாதடினார்.

இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில், இன்று  கீழமை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று உறுதி செய்தது.

[youtube-feed feed=1]