சென்னை: திருநங்கைகளுக்கு சிறப்புப் பிரிவின் கீழ் பணி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
திருநங்கைகள் வேலைவாய்ப்பு குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது இந்த வழக்கை நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்து வருகிறார்.வழக்கின் விசாரணையின்போது, அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டில் திருநங்கை களும் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து கருத்து தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆர் சுரேஷ் குமார், ‘அரசு வேலைகளில் அவர்களுக்கான இடங்கள் காலியாகிவிடும் வாய்ப்பு இருப்பதாக கூறியதுடன், அதனால்தான் திருநங்கைகளுக்கு குறிப்பிட்ட சதவிகிதத்தை ஒதுக்கலாம் என்று தெரிவித்ததுடன், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு குறிப்பிட்ட சதவீதத்தை ஒதுக்குவதில் தமிழக அரசுக்கு சிரமம் இருந்தால், குறைந்தபட்சம் அவர்களை சிறப்புப் பிரிவின் கீழ் பரிசீலிக்க வேண்டும் என்று கூறினார்.
நாட்டிலேயே முதல் மாநிலமாக திருநங்கைகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்கியது கர்நாடக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.