அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் ஓ. பன்னீர்செல்வத்தை நீக்கி 2022 ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இருந்தபோதும் அதிமுக கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி அதிமுக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக எடப்பாடி தரப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று நிரந்தர தடை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]