சென்னை:  மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி சத்ய நாராயண பிரசாத்  (மே 6) சென்னையில் காலமானார்.  சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும் 63 நீதிபதிகளில் 56 வயதான இவர் சீனியாரிட்டியில் 42 வது இடத்தில் உள்ளார். இவர் ஓய்வுபெற்ற மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியின் மகனாவார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் 2021-ல் உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்டார் நீதிபதி சத்ய நாராயண பிரசாத் . அவருக்கு வயது 56. இவருக்கு நேற்று மாலை திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், அவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவரது திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீதிபதி சத்யநாராயணா பிரசாரத். அரக்கோணம் அருகே உள்ள மின்னல் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஜெய்பிரசாத் ஓய்வு பெற்ற மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக இருந்தார். இவர் , மார்ச் 15, 1969-ல் தஞ்சாவூரில் பிறந்தார்.  சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் வரலாற்றில் இளங்கலை பட்டம் பெறுவதற்கு முன்பு வேலூரில் உள்ள வோர்ஹீஸ் மேல்நிலைப் பள்ளியில் படித்த நீதிபதி பிரசாத், டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டமும், சட்டப் பட்டமும் பெற்றார்.

1997-ல் வழக்கறிஞராக பதிவு செய்து 2000-ம் ஆண்டு வரை வழக்கறிஞர் இளங்கோவிடம் பணியாற்றினார். சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம், கோயம்புத்தூர் மாநகராட்சி, இந்திய உணவுக் கழகம் மற்றும் பல அமைப்புகளின் நிலையான ஆலோசகராக பணியாற்றினார். 2021-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார் சத்ய நாராயண பிரசாத்.