சென்னை: மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த 2 பேர் நிரந்தர நீதிபதிகளாக  உதவி உயர்வு பெற்ற நிலையில், அவர்கள் இன்று நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 75. ஆனால், தற்போது வரை 64 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.  இதைத்தொடர்ந்து, மேலும் 2 புதிய நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு  நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் விரைவில் பொறுப்பேற்க உள்ளனர்.

இந்த நிலையில்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த 2 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர். அதன்படி,  கூடுதல் நீதிபதிகளாக இருந்த சி.குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர். இருவருக்கும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஸ்ரீராம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.