போபால்:
ராஜஸ்தானின் சித்தூர் ராணி பத்மாவதியின் வரலாற்றை கதையம்சமாக கொண்ட பத்மாவதி படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த டிசம்பர் 1ம் தேதி வெளியாவதாக இருந்த படம் நிறுத்தப்பட்டது.
பாஜக ஆளும் 4 மாநிலங்களில் இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 25ம் தேதி பத்மாவத் என்று பெயரில் திருத்தம் மேற்கொண்டு படம் திரைக்கு வருகிறது.
இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலம் ரத்லாம் மாவட்டத்தில் ஜோவ்ரா பகுதி பள்ளியில் இன்று ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பத்மாவத் பட பாடலுக்கு மாணவர்கள் நடனமாடினர். இதனையறிந்த கர்ணி சேனா அமைப்பினர் பள்ளிக்கு கும்பலாக வந்து ஆண்டு விழாவை நிறுத்தினர்.
மேலும், அங்குள்ள நாற்காலி, ஸ்பீக்கர்கள், மேஜைகளை அடித்து நொறுக்கினர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.