போபால்;
மத்திய பிரதேசத்தில் வரும் செப்டம்பர் மாதம் முதல் புறநோயாளி துறை தொடங்கப்படுகிறது. இதில் ஜோதிடர்களும், குறி சொல்பவர்களும் நோயாளிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளும் திட்டத்தை முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அரசு செயல்படுத்தவுள்ளது என்ற செய்திகள் வெளியானது.
இந்த செய்தி அபத்தமானது என்று அம்மாநில சுகாதார துறை அமைச்சர் ருஸ்தம் சிங் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், ‘‘ இது மாதிரியான திட்டமே அரசிடம் இல்லை. இது தொடர்பாக விவாதம் நடந்தது என்பதையும் ஏற்க முடியாது’’ என்றார்.
மகரிஷி பதஞ்சலி சமஸ்கிருத சன்ஸ்தன் (எம்பிஎஸ்எஸ்) அமைப்பின் சார்பில் யோகா சார்ந்த மையம் தான் அமைக்கப்படும். இதில் ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், வாஸ்து நிபுணர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இவர்கள் சுகாதார மற்ற இதர வகையில் மக்களுக்கு திருமணம், வேலை தொடர்பான ஆலோசனைகளை வழங்குவார்கள் என்று இதன் இயக்குனர் திவாரி தெரிவித்துள்ளார்.