போபால்
இனி மத்தியப் பிரதேச மாநில அமைச்சர்கள் அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என அம்மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
நேற்றுமத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் அம்மாநிலத்தின் முதல்வர் மோகன் யாதவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில்,
”கடந்த 1972ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கும் விதிமுறையை நீக்குவது என்று அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. மாநில அமைச்சர்களுக்கான ஊதியம் மற்றும் சலுகைகளுக்கான வரியை மாநில அரசு செலுத்த வேண்டும் என்ற விதி நீக்கப்படுகிறது.
இனி, மத்தியப் பிரதேச அமைச்சர்கள் தங்களது ஊதியம் மற்றும் அகவிலைப்படிகளுக்கான வரியை தாங்களே செலுத்த வேண்டும் என்று மத்தியப் பிரதேச அமைச்சரவை முடிவு செய்துள்ளது”
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
மத்தியப் பிரதேச முதல்வர் பரிந்துரையின்படி இதனை அனைவரும் ஏற்று ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது என அம்மாநில ஊரக நிர்வாகத்துறை அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார்.