குவாலியர்:
மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியர் ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில், ரயில் நிலைய கேன்டீனில் தீ பரவியதும், அது உடடினயாக அணைக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து இந்தியாவிலும், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்பட முக்கியமான பகுதிகள் கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், குவாலியர் ரெயில் நிலையத்தில் உள்ள கேன்டீனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. கேன்டீனினில் பணியாற்றி வந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினர். பிளாட்பாரத்தில் நின்றிருந்த பயணிகளும் வெளியேறினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், ரெயில் நிலையத்துக்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரண நடத்தி வருகின்றனர்.