போபால்,

த்திய பிரதேசத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கி நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகினர். இதற்கு காரணமாக இருந்த மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் போலீஸ் எஸ்.பி. இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேசத்தில்,  விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர்களுக்கு சிறந்த கொள்முதல் விலை அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி  கடந்த 1-ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக பால் மற்றும் காய்கறிகளை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் போலீசார் கைது செய்தும், தடியடி நடத்தியும் கலைத்து வந்தனர்.

இதன் காரணமாக  மத்திய பிரதேசத்தில் உள்ள  மண்ட்சோர் என்ற இடத்தில் விவசாயிகள் போராட்டத்தை  போலீசார் தடுத்து நிறுத்த முயற்சித்ததால், போராட்டம் வன்முறை களமாக மாறியது.

இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசார் கண்ணீர் புகை வீசியும், வன்முறை யில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடும் நடத்தினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் 5 விவசாயிகள் பலியாகி உள்ளனர். ஆரம்பத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்று கூறி வந்தனர்.

ஆனால், விசாரணையில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது உறுதியானதால், போலீஸ் எஸ்.பி துப்பாக்கி சூடு நடத்தியதை ஒத்துக்கொண்டார்.

இதையடுத்து, துப்பாக்கி சூடு நடத்த அனுமதி வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் போலீஸ் எஸ்பி ஆகியோரை இடமாற்றம் செய்து மத்திய பிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மாநிலம் முழுவதும்  விவசாயிகள் போராட்டம் இன்று 8வது நாளாக  நீடித்து வருகிறது.  விவசாயிகள் 6 பேர் பலியானதால் மான்ட்சார் மாவட்டத்திலும் அதை சுற்றியுள்ள ஊர்களிலும் கடும் பதற்றம் நிலவி வருகிறது.

இதற்கிடையில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய மண்டாசார் பகுதிக்கு, அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி செல்ல இருப்பதாக கூறியிருந்தார்.

ஆனால், அவர் கலவரம் நடந்த பகுதிக்கு வர மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் தடை விதித்தும், போலீசை குவித்தும் வருகின்றனர்.

இதன் காரணமாக அந்த பகுதி நீறுபூத்த நெருப்பு போல கொதிப்பான நிலையில் உள்ளது.

விவசாயிகள் மீதான துப்பாக்கி சூடு நடைபெற்றதை தொடர்ந்து ம.பியில் உள்ள ரட்லாம், நீமுச் மற்றும் மண்டாசாவூர் பகுதிகளில்  இன்டர்நெட் சேவை, சமூக வலைதள சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வன்முறை பரவுவதை தடுக்க போலீஸ் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்  முடக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத்தியப்பிரதேசத்தில் பாரதியஜனதாவை சேர்ந்த  மாநிலமுதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.