போபால்
மூத்த பாஜக தலைவரும் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் ஆன கைலாஷ் சந்திர ஜோஷி இன்று மரணம் அடைந்தார்.
கடந்த 1977-78 ஆம் வருடம் மத்தியப் பிரதேச மாநில முன்னால் முதல்வராக கைலாஷ் சந்திர ஜோஷி பதவி வகித்து வந்தார். அத்துடன் மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும், மத்தியப் பிரதேச சட்டப்பேரவையிலும் உறுப்பினராக இருந்தவர் ஆவார். கடந்த 1929 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு 90 வயதாகிறது.
இவர் கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்தார். இன்று காலை போபாலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கைலேஷ் சந்திர ஜோஷி மரணம் அடைந்துள்ளார். இவருடைய மறைவுக்குப் பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கைலாஷ் சந்திர ஜோஷிக்கு 3 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர். இவருடைய இறுதிச் சடங்கு நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.