ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து சிலம்பரசன் நடித்து வரும் படம் மாநாடு.. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார்.
கடந்த சில நாட்களாக பாண்டிச்சேரியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.. அங்கே திட்டமிட்டபடி வெளிப்புற காட்சிகளை படமாக்கும்போது புயல் மற்றும் மழை காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
ஆனாலும் சிலம்பரசனின் ஒத்துழைப்பால் ஒருநாளை கூட வீணாக்காமல், உள்ளரங்கு காட்சிகள் அனைத்தையும் திட்டமிட்டதற்கு முன்னதாகவே படமாக்கியுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு,