கொல்கத்தா:

ந்திய கிரிக்கெட் வீரர் தோனி, ஐபிஎல் போட்டிகளில் தனது திறமையை நிரூபித்து மீண்டும், அணிக்கு திரும்புவார் என்று தோனியின் குழந்தைப்பருவ பயிற்சியாளர் கேசவ் ரஞ்சன் பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி, தோனிக்கு உலக டி20 அணிக்காக வீரர்கள் பட்டியலில் இடம் பெறுவார் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஞ்சியில் கேசவ் ரஞ்சன் பானர்ஜி, தற்போதைய சூழ்நிலையில் ஐபிஎல் நடக்குமா என்று தெரியவில்லை. இருந்த போதிலும், இந்திய அணியில் இடம் பெற தோனியை பிசிசிஐ அழைக்குமா? என்று சரியாக தெரியவில்லை. இருந்தாலும், டி20 உலக கோப்பைக்ககான இந்திய அணியில் தோனி கண்டிப்பாக இடம் பெறுவார் என்று எனது மனதுக்கு தோன்றுகிறது. மேலும் இந்த வாய்ப்பு கண்டிப்பாக, தோனிக்கு கடைசி போட்டியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன், ராஞ்சியில் பயிற்சி பெற்றதுடன், சென்னையில் ஐபிஎல் முகாமில் பயிற்சி பெற சென்னை வந்துள்ளார். சென்னையில் இருந்து தோனி ராஞ்சி திரும்பியதும், அவரிடம் பேசினேன். அவர் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து அவர் எந்த போட்டியிலும் விளையாட என்பது உண்மை என்றாலும், அவர் 538 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுல்லர்.

தோனி, ஒரு வாரத்திற்கு மேலாக சென்னையில் பயிற்சி பெற்றுள்ளார். தற்போது, அவரது வீட்டிலேயே ஜிம், பேட்மிண்டன் விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சிக்காக ஓடுவதற்கான இடம் என அனைத்தும் வடிவமைத்து அதில் பயிற்சியும் பெற்று வருகிறார்.

இந்நிலையில், அவரை டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சேர்ப்பது குறித்து பிசிசிஐ-யின் முடிவுக்காக காத்திருக்க வேண்டி நிலையில் உள்ளோம். இந்த முடிவை பிசிசிஐ எடுக்க ஜுன் மாதம் வரை கால அவகாசம் உள்ளதால், நாம் காத்திருந்து தான் பார்கக் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தோனிக்கு வரும் ஜூலை மாதம் வந்தால் 39 வயதாகிறது. இந்நிலையில் அவரது கிரிக்கெட் கேரியரை ஐபிஎல் போட்டிகளே முடிவு செய்யும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்திய கிரிக்கெட் பிரபலங்களான சுனில் கவாஸ்கர் மற்றும் வீரேந்திரா சேவாக் போன்றவர்களும் தோனி மீண்டும் அணியில் இடம் பிடிப்பது குறித்து சந்தேகத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த நேரத்தில் பிசிசிஐ சரியான முடிவை எடுக்க வேண்டியது அவசியமாகும். அவர்கள் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பார்கள் என்றும் பானர்ஜி தெரிவித்துள்ளார்.