சென்னை: தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கள ஆய்வு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு மேற்கொள்ளும் திமுக குழுவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும், தனியாக சந்திக்க கூடாது என கூறினார்.

நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது. குறிப்பாக மாநில முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியிலேயே தோற்கடிக்கப்பட்டார். இது பேசும்பொருளாக மாறியது.

இதையடுத்து, திமுகவில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட கட்சி தலைவரான ஸ்டாலின்,  தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு நடத்த 36 பேர் குழுவினரை அமைத்து உத்தரவிட்டார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்விற்காக 36 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, இக்குழுவானது தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்களை நேரடியாகச் சந்தித்துக் கருத்துகளையும் பரிந்துரைகளையும் பெற்று கள ஆய்வு அறிக்கையை ஜூன் 5ஆம் தேதிக்குள் கழகத் தலைவர் அவர்களிடம் சமர்ப்பிக்கும்  என கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில்,  தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கள ஆய்வு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.  இந்தஆலோசனை கூட்டத்தில் திமுக இளைஞரணி தலைவரும்,  எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழு! திமுக தலைவர் ஸ்டாலின்

[youtube-feed feed=1]