மதுரை:
மதுரையில் ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் தனது பங்கு நிச்சயம் இருக்கும் என்று அழகிரி தெரிவித்துள்ள நிலையில், இந்த ஆலோசனை நடக்கிறது. இதனால் இந்த ஆலோசனை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மதுரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்க உள்ள இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அழகிரியின் தொடண்டர்க்ளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் அழகிரி புதிய கட்சி தொடங்குவது குறித்தோ அல்லது, மீண்டும் திமுகவில் இணைவது குறித்தோ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதால், இந்த கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.