நியூஸ்பாண்ட்
 

விக்ரம் - கருணாநிதி
விக்ரம் – கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேத்திக்கும் நடிகர் விக்ரமின் மகளுக்கும் ஜூலை 10ம் தேதி நடக்க இருக்கும் திருமண நிச்சயதார்த்த நிகழ்வுக்கு  கருணாநிதியன் இரண்டாவது மகனும் கட்சியைவிட்டு நீக்கப்பட்டவருமான மு.க. அழகிரியை வருவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. எப்படியாவது அவரை இந்த நிச்சயதார்த்த நிகழ்வுக்கு வரவைக்க வேண்டும் என்று கருணாநிதி தனது மகள் செல்விக்கு கட்டளையிட்டிருக்கிறாராம்.
மேலும் படியுங்கள்…
தி.மு.க.வில் நடந்த சகோதர யுத்தத்தில் பொருளாளர் ஸ்டாலினிடம் தோல்வி அடைந்தார் தென் மண்டல பொறுப்பாளராக இருந்த மு.க. அழகிரி. இவர் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார். அவ்வப்போது, “இதோ கட்சியில் சேரப்போகிறார்.. அதோ சேரப்போகிறார்” என்று தகவல்கள் வரும். ஆனால் அப்படி நடக்கவே இல்லை.
ஸ்டாலின் - அழகிரி
ஸ்டாலின் – அழகிரி

இது தொடர்பாக கருணாநிதியின் மகள் செல்வி எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன.
இடையில் கருணாநிதியின் சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தார் மு.க. அழகிரி. “குடும்ப உறுப்பினராக வீட்டுக்கு வந்திருக்கிறார்” என்று இந்த நிகழ்வை சிம்பிளாக முடித்தார் மு.க. ஸ்டாலின்.
இந்த நிலையில் நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதாவுக்கும் கருணாநிதியின் கொள்ளுப்பேரன் மனு ரஞ்சித்துக்கும் திருமணம் செய்துவைக்க இரு குடும்பத்தாரும் பேசி முடிவு செய்தனர்.
கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்துவின் மகள் தேன் மொழி. இவரது கணவர் கெவின் கேர் அதிபர் ரங்கநாதன். இந்த தம்பதியின் மகன்தான் மனு ரஞ்சித்.
மனு ரஞ்சித் – அக்ஷிதா இருவரும் காதலித்து வந்தனர். அவர்களது காதலை அங்கீரத்து இரு குடும்பத்தினரும் திருமணம் செய்து வைக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
கலாநிதி
கலாநிதி

இன்னொரு புறம், சன் டிவி அதிபர் கலாநிதியும் நடிகர் விக்ரமும் லயோலா கல்லூரியில் படித்தவர்கள்.  அந்த நட்பு இன்றும் தொடர்கிறது. அதன் அடிப்படையில் இரு குடும்பமும் பேசி திருமணத்தை முடிவு செய்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, வரும் 10ம் தேதி நடக்கும் நிச்சயதார்த்தத்துக்கு மு.க. அழகிரி வருவாரா என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தி.மு.க. வட்டாரத்தில், “இந்த திருமண நிச்சயதார்தத்தை முன்வைத்து, மு.க. அழகிரியை மீண்டும் குடும்பத்தாருடன் இணைக்க கருணாநிதி விரும்புகிறார். நிச்சயதார்த்த விழாவுக்கு அவசியம் வர வேண்டும் என்று மகள் செல்வி மூலம் சொல்லியிருக்கிறார். மகிழ்வான தருணத்தில் அழகிரியும், ஸ்டாலினும் சந்தித்துக்கொண்டால் இருவருக்கிடையேயான ஈகோ பறந்துபோய்விடும் என்று கருணாநிதி நினைக்கிறார்” என்கிறார்கள்.
அதே நேரம், வேறு ஒரு தகவலும் உலவுகிறது. “சமீபத்தில் கருணாநிதியின் மகன் மு.க. தமிழரசுவின் பிறந்தநாள் நட்சத்திர ஓட்டலில் கொண்டாடப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டார்கள். அதே ஓட்டலில் தங்கியிருந்த மு.க. அழகிரி விழா நேரத்தில் வந்த வாழ்த்தவில்லை. மு.க. ஸ்டாலின் உட்பட குடும்பத்தினர் பலர் வாழ்த்திச் சென்ற பிறகுதான அழகிரி வந்தார்.
விக்ரம் மகள் அக்ஷிதா
விக்ரம் மகள் அக்ஷிதா

ஆகவே விக்ரம் மகள் திருமண நிச்சயதார்த்த்துக்கு மு.க. அழகிரி வந்தாலும், ஸ்டாலினுடனான பிணக்கு தீருமா என்பது சந்தேகமே” என்றும் சொல்லப்படுகிறது.
“ஆனால் அப்படி நடந்துவிடக்கூடாது. அனைவரும் இருக்கும்போது.. குறிப்பாக ஸ்டாலின் இருக்கும் போது, அழகிரியை வரவைக்க வேண்டும். அதன் மூலம்  இருவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்று  அப்பா கருணாநிதி தீவிரமாக முயற்சக்கிறார்” என்கிறார்கள்.
ஆக தனது நிச்சயதார்த்தம் மூலமாக ஸ்டாலின் – அழகிரி பிணக்கைத் தீர்க்கப்போகிறார் அக்ஷிதா.
எப்படியோ, புகுந்தவீடு வரும்போதே, குடும்பத்தை ஒன்றிணைக்கும்  அக்ஷிதாவை வாழ்த்துவோம்!