ஜெர்மனி விமான சேவை நிறுவனமான லுஃப்தான்சா, தெஹ்ரான் மற்றும் பெய்ரூட்-க்கான விமான சேவையை அடுத்த மூன்று மாதங்களுக்கு ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் பதற்றமான சூழல் காரணமாக 2025ம் ஆண்டின் முற்பகுதி வரை தனது விமான சேவையை தொடர் ரத்து செய்துள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கான விமானப் பயணங்கள் ஜனவரி 31ஆம் தேதி வரையிலும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்குச் செல்லும் விமானப் பயணங்கள் பிப்ரவரி 28ஆம் தேதி வரையிலும் ரத்து செய்யப்படும் என்று லுஃப்தான்சா நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

லுஃப்தான்சா-வைத் தொடர்ந்து ‘சுவிஸ்’ விமானச் சேவை நிறுவனம் அதன் பெய்ரூட் விமானச் சேவையை ஜனவரி 18ஆம் தேதி வரை ரத்து செய்வதாகக் கூறியுள்ளது.

[youtube-feed feed=1]