டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் 2 நாட்கள் டிஜிபி.க்கள் மாநாடு நடைபெறுகிறது. அதன்படி வரும் 20, 21ம் தேதிகளில் லக்னோவில் நடை பெறும் இந்த மாநாட்டில் அனைத்து மாநில காவல்துறை தலைவர்கள், ஐஜிக்கள் பங்கேற்க உள்ளனர்.
நாட்டின் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள், சவால்கள் குறித்து ஆலோசிக்க, அனைத்து மாநில காவல்துறை டிஜிபி.க்கள், ஐஜி.க்கள், உயரதிகாரிகள் கலந்துகொள்ளும் 2 நாள் மாநாடு வரும் 20, 21ம் தேதிகளில் லக்னோவில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 250 பேர் கலந்துகொள்வார்கள் என தெரிகிறது.
இந்த மாநாட்டுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாக்கும் நிலையில், பிரதமர் மோடி உள்பட உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்ற னர். இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை இந்திய உளவுத்துறையான ஐபி ஏற்பாடு செய்துள்ளது.
இந்த மாநாட்டில் ‘இணைய பயங்கரவாதம், இளைஞர்களை தீவிரமயமாக்கல், மாவோயிஸ்ட் வன்முறை போன்றவை குறித்தும், அதை தடுக்கும் நடவடிக்கைள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும், காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவுடன் அரங்கேறும் தீவிரவாத நடவடிக்கைகள், கொரோனா தொற்றின் போது முன்களப்பணியாளர்களாக காவல்துறை ஆற்றிய சேவை உள்பட நாட்டின் பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.