திருவனந்தபுரம்:
பார்க்கில் ஆண் நண்பர்களுடன் பேசிக்காண்டிருந்த கல்லூரி மாணவியரை பெண் போலீஸ் அதிகாரி தாக்கிய விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பார்க், பீச்சுகளில் பள்ளி, கல்லூரி மாணவியர் தங்கள் காதலர்கள் அல்லது ஆண் நண்பர்களுடன் பல மணிநேரம் மெய் மறந்து பேசிக்கொண்டிருப்பதை கண்டிருக்கிறோம்.
இவர்களை காவல்துறையினர் கண்டும் காணாமல் விடுவர். ஆனால் கேரளாவில் பார்க் ஒன்றில் தங்கள் ஆண் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியரை, காவல் அதிகாரி ஒருவர் கடுமையாக அறைந்திருக்கிறார்.
“ஆண் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்ததற்காக மாணவியரை தாக்கியது தவறு. அவர்கள் எல்லோரும் காதலர்கள் அல்ல. அப்படியே இருந்தாலும் காவல் அதிகாரி தாக்கலாமா” என்று இளைஞர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மனித உரிமை ஆர்வலர்களும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளனர். அதே நேரம், “அந்த பெண் காவல் அதிகாரியின் நடவடிக்கை பாராட்டத்தக்கது” என்றும் பலர் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த சம்பவம், கேரளாவில் வாதப்பிரதிவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.