கொழும்பு:

இலங்கையில் மீதொட்டமுல்ல  என்ற இடத்தில் இருந்த பெரும் குப்பை மேடு சரிந்ததில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

இந்த பெரும் குப்பை மேட்டுக்கு அருகில் இருந்த வீடு ஒன்று குப்பையால் முழுமையாக மூடப்பட்டது. இதில் அக்குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் பலியானார்கள்.

அவர்கள் வளர்த்த நாய் ஒன்று இந்த சரிவு ஏற்பட்டபோது, வெளியில் எங்கோயோ சுற்றிக்கொண்டிருந்தது. பிறகு அந்த நாய் வீட்டுக்கு வந்தபோது வீடு முழுதும் மூடப்பட்டிருப்பதை கண்டு சோகத்துடன் ஊளையிட்டது. தனது எஜமானர்களைத் தேடித்தேடி சுற்றி வந்தது.

பிறகு இடிந்த அந்த வீட்டின் மீதே கடந்த 14ம் தேதியில் இருந்து இன்றுவரை சோகத்துடன் அமர்ந்திருக்கிறது. உணவு நீர் இன்று உடல் மெலிந்த நிலையில் அந்த நாய் கண்களில் நீருடன் உட்கார்ந்திருக்கறது.

இந்த படம் இலங்கையில் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தனது எஜமான் உயிரோடு மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் இந்த நாய் காத்திருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

[youtube-feed feed=1]