கோலாலம்பூர்
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இல்லத்தில் நடந்த சோதனையில் காவல்துறையினர் ஏராளமான செல்வங்களை கைப்பற்றி உள்ளனர்.
மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அதை ஒட்டி முந்தைய அரசு மீது உள்ள அனைத்துப் புகார்களும் விசாரிக்கப்படும் என தற்போதைய முதல்வர் கூறி உள்ளார். ஊழல் புகாரை முன்னிட்டு காவல்துறையினர் நஜிப் ரசாக் வீட்டில் சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையில் 52 பிரம்மாண்டமான பைகள், 10 விலையுயர்ந்த கடிகாரங்கள் மற்றும் எக்கச்சக்கமான பன்னாட்டு ரொக்கப் பணம் ஆகியவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ரொக்க மதிப்பு சுமார் $2.25,000 வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. அத்துடன் ஊழல் செய்தற்கான ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து நஜிப் ரசாக்கின் வழக்கறிஞர் சோதனையின் போது முன்னாள் பிரதமர் மிகவும் துன்புறுத்தப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.