வாஷிங்டன்
உலகின் பல தலைவர்களின் டிவிட்டர் கணக்கில் உள்ள ரசிகர்கள் (followers) போலிகள் என டிவிட்டரின் ஒரு செயலி தெரிவிக்கிறது.
தற்போது அரசியல் தலைவர்கள் மற்றும் கலையுலகம் உட்பட பலதுறைப் பிரமுகர்கள் என உலகிம் அனைத்து பிரபலங்களும் டிவிட்டர் கணக்கு வைத்துள்ளனர். அவர்களுக்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகம் உள்ளன. பெரும்பாலானோர் தங்கள் கருத்துக்களையும் முடிவுகளையும் டிவிட்டரில் பதிகின்றனர்.
அதே நேரத்தில் பல போலி கணக்குகளும் டிவிட்டரில் உலவுகின்றன. அவர்களிலும் பிரபலங்களின் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். அந்த போலி ரசிகர்களை கண்டுபிடிக்க தற்போது டிவிட்டர் செயலி ஒன்றை நிறுவி உள்ளது. அந்த செயலி பல உலகப் பிரமுகர்களின் கணக்கை ஆய்ந்து பல தலைவர்களுக்கும் போலி ரசிகர்கள் அதிகமாக உள்ளதாக கூறி உள்ளது.
அதன்படி அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு உள்ள 47,90,00.000 பேரில் 37% போலியானவர்கள். அடுத்தபடியாக இந்தியப் பிரதமர் மோடிக்கு உள்ள 4,03,00,000 ரசிகர்களீல் 60% போலியானவர்கள். போப் ஆண்டவருக்கு 59% போலி ரசிகர்கள் உள்ளனர் என அந்த செயலி தெரிவிக்கிறது.
Pic courtesy : Twitter