பிரயாக்ராஜ்
மகா கும்பமேளவையொட்டி பிரயாக் ராஜில் ஏராளமான பக்தர்கள் கூடி உள்ளனர்/

கடந்த ஜனவரி 13 ஆம் தேதி உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 26 ஆம்தேதி வரை நடைஎற உள்ளது. மகா கும்பமேளாவுக்கு இம்முறை 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது வரை 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபாடு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்க, தொடர்ந்து பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மகா கும்பமேளாவுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்களை செலவழிப்பதாக ஆளும் பாஜக அரசு மீது, அந்த மாநில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. முதல்வர் யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை தெரிவிப்பதாகவும் மகா கும்பமேளாவுக்காக மாநில அரசு ரூ.1,500 கோடி மட்டுமே ஒதுக்கி இதுவரை மாநில அரசுக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது எனவும் இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.