டபோலிம், கோவா
கோவா மாநில டபோலிம் விமானநிலையத்தில் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு வரவேற்பு பொதுக் கூட்டம் நடைபெற்றதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
கடந்த சனிக்கிழமை அன்று கோவாவுக்கு பாஜக தலைவர் அமித்ஷா வருகை புரிந்தார். அப்போது டபோலிம் விமான நிலையத்தில் திடிரென கம்பளங்கள் விரிக்கப்பட்டன. பல இருக்கைகள் வரிசையாகப் போடப்பட்டன. பிறகு மைக், ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டன. இவை அனைத்தும் அமித்ஷா வரும் நேரமான காலை 11.15க்கு முன் அவசர அவசரமாக நடந்தன. அங்கிருந்த பாதுகாவலர்கள் இதை ஆட்சேபிக்கவில்லை.
அமித்ஷா வின் வருகைக்காக செய்தியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட அட்டவணையில் இப்படி ஒரு பொதுக்கூட்டம் இருப்பதாக குறிப்பிடவில்லை. அமித்ஷாவை வரவேற்க கோவாவின் முதல் அமைச்சர், மத்திய அமைச்சர் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் அங்கு வந்தனர். பேருந்துகள் மூலமாக தொண்டர்களும் வந்து குவிந்தனர்.
விமான நிலையத்தில் வந்து இறங்கியவர்கள் அனைவரும் உடனடியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். ஐந்து நிமிட அவகாசம் கூட தராதமைக்கு பயணிகள் தங்களின் ஆட்சேபத்தை தெரிவித்தும் ஒரு பயனும் இல்லை.. அதிகபட்ச பாதுகாப்பு உள்ள விமானநிலையத்தில் இப்படி ஒரு பொதுக்கூட்டம் நடத்துவது பற்றி கேட்ட கேள்விகள் எதற்கும் விமானநிலைய அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை. பொதுக்கூட்டம் எந்த தடையும் இன்றி நடந்தது.
அன்று அதிகாரிகளின் கெடுபிடிக்கு ஆளான பயணிகளில் ஒருவரான ராட்ரிக்யூஸ் என்னும் வழக்கறிஞர், பொதுக்கூட்ட அமைப்பாளர்கள் மேல் நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார். இந்த புகாரை அவர் விமான போக்குவரட்த்து அமைச்சகம், கோவாவின் தலைமச் செயலாளர், காவல்துறை இயக்குனர் ஆகியோரிடம் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது..
காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ஆளும் பாஜக தனது பலத்தை வெளியே காட்டிக் கொள்ள இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆளும் கட்சிக்கு பெருமையை விட கேவலத்தையே கொடுக்கும் என பொதுமக்களில் பலர் கூறியுள்ளனர்