அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சீனாவின் ஷாங்காய் நகருக்குச் சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானி பாஸ்போர்ட்டை மறந்ததால் அந்த விமானம் மீண்டும் அமெரிக்கா திரும்பியது.
மார்ச் 22ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள்.
லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து ஷாங்காய் நோக்கிச் செல்லும் UA198 விமானம் சனிக்கிழமை பிற்பகல் பசிபிக் பெருங்கடலின் மேல் இருந்தபோது, அது U- டர்ன் செய்து சான் பிரான்சிஸ்கோவுக்குச் சென்றதாக கண்காணிப்புத் தரவு காட்டுகிறது.
விமானி தனது பாஸ்போர்ட் இல்லாதது குறித்து விமான நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அந்த விமானத்தை சான் பிரான்சிஸ்கோவுக்கு திரும்ப உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து 270 பேருடன் பயணம் செய்த அந்த விமானம் சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கிய நிலையில் அதை வேறொரு விமானி ஒட்டிச் சென்றார்.
இதனால், அந்த விமான வழக்கமாக செல்ல வேண்டிய நேரத்தைக் காட்டிலும் 6 மணி நேரம் தாமதமாக ஷாங்காய் சென்றது.