சிவ தாண்டவங்கள்
சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவங்கள் சிவதாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
சிவபெருமான் தண்டு முனிவருக்கும், பரத முனிவருக்கும் தாண்டவங்களை உருவாக்கி கற்பித்தார் என்று நாட்டிய சாத்திரத்தின் நாலாவது அத்தியாயமான தாண்டவலட்சணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவபெருமானின் தாண்டவம் உலக நலனை நோக்கியே நிகழ்ப்படுவதாகவும், அதனுடைய நோக்கமானது உயிர்களை மலங்கள் (குற்றங்கள்) பிடியிலிருந்து விடுவிப்பதாகும்.
சிவதாண்டவத்தில் சிவனின் உடலமைப்பு அணி கலன்கள் கைகளில் உள்ள படைக்கலன்கள், தலைமுடி மற்றும் பாதங்களின் அமைப்பு ஆகிய அனைத்திற்குமே மெய்ப்பொருளியல் விளக்கங்கள் சைவர்களால் எடுத்துரைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு தாண்டவங்களும் வெவ்வேறு மெய்பொருளியல் கோட்பாடுகளை விளக்குகின்றன. சிவ தாண்டவங்களில் பல்வேறு தாண்டவங்கள் உள்ள. ஒவ்வொரு தாண்டவத்துக்கும் ஒவ்வொரு பொருள் உண்டு.
பஞ்ச தாண்டவங்கள்
ஆனந்த தாண்டவம், அசபா தாண்டவம், ஞானசுந்தர தாண்டவம், ஊர்த்தவ தாண்டவம், பிரம தாண்டவம்
சப்த தாண்டவங்கள்
ஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், உமா தாண்டவம், ஊர்த்தவ தாண்டவம், கஜ சம்ஹார தாண்டவம், கெளரி தாண்டவம், காளிகா தாண்டவம்.
சப்த விடங்கதாண்டவங்கள்
உன்மத்த தாண்டவம், அசபா தாண்டவம், வீசி தாண்டவம், குக்குட தாண்டவம், ப்ருங்க தாண்டவம் ,கமலா தாண்டவம், அம்சபாத தாண்டவம்.
நவ தாண்டவங்கள்
ஆனந்த தாண்டவம்ம் சந்தியா தாண்டவம்ம் திரிபுரதாண்டவம்ம் ஊர்த்தவ தாண்டவம், புஜங்க தாண்டவம் ,முனி தாண்டவம், பூத தாண்டவம், சுத்த தாண்டவம் ,சிருங்காரத் தாண்டவம்.
பன்னிரு தாண்டவங்கள்
ஆனந்த தாண்டவம் ,சந்தியா தாண்டவம், சிருங்கார தாண்டவம் ,திரிபுர தாண்டவம், ஊர்த்தவ தாண்டவம், முனித் தாண்டவம், சம்ஹார தாண்டவம், உக்ர தாண்டவம், பூத தாண்டவம், பிரளய தாண்டவம், புஜங்க தாண்டவம், சுத்த தாண்டவம்.
108 தாண்டவங்கள்
தாளபுஷ்பபுடம் ,வர்த்திதம் ,வலிதோருகம், அபவித்தம், சமநகம், லீனம், ஸ்வஸ்திகரேசிதம், மண்டலஸ்வஸ்திகம், நிருட்டகம், அர்த்த நிகுட்டகம் கடிச்சின்னம் , அர்த்தரேசிதகம் ,வக்ஷஸ்வஸ் திகம், உன்மத்தம், ஸ்வஸ்திகம் பிருஷ்டஸ்வஸ்திகம், திக்ஸ்வஸ்திகம், அலாதகம், கடீசமம் ,ஆஷிப்தரேசிதம், விக்ஷிப்தாக்ஷிப்தம், அர்த்தஸ்வஸ்திகம் ,அஞ்சிதம், புஜங்கத்ராசிதம், ஊத்வஜானு, நிகுஞ்சிதம் ,மத்தல்லி, அர்த்தமத்தல்லி, ரேசித நிகுட்டம், பாதாபவித்தகம், வலிதம், கூர்ணிதம் ,லலிதம் ,தண்டபட்சம், புஜங்கத்ரஸ்தரேசிதம், நூபுரம், வைசாகரேசிதம், பிரமரகம், சதுரம், புஜங்காஞ்சிதகம், தண்டரேசிதம், விருச்சிககுட்டிதம், கடிப்பிராந்தகம், லதாவிருச்சிகம், சின்னம், விருச்சிகரேசிதம், விருச்சிகம், வியம்ஸிதம், பார்சுவநிகுட்டகம், லலாட திலகம், கிராந்தகம், குஞ்சிதம், சக்ரமண்டலம், உரோமண்டலம், ஆஷிப்தம், தலவிலாசிதம், அர்க்கலம் ,விட்சிப்தம், ஆவர்த்தம், டோலாபாதம், விவிர்த்தம், விநிவிர்த்தம், பார்ஸ்வக்ராந்தம், நிசும்பிதம், வித்யுத்பிராந்தம், அதிக்ராந்தம், விவர்த்திதகம், கஜகீரிடிதகம், தவஸம்ஸ்போடிதம், கருடப்லுதம், கண்டசூசி பரிவிர்த்தம், பார்சுவஜானு, கிருத்ராவலீனகம், சன்னதம், சூசி, அர்த்தசூசி, சூசீவித்தம், அபக்ராந்தம், மயூரலலிதம், சர்பிதம், தண்டபாதம், ஹரிணப்லுதம், பிரேங்கோலிதம், நிதம்பம், ஸ்கலிதம், கரிஹஸ்தம், பிரஸர்ப்பிதகம், சிம்ஹ விக்ரீடிதம், ஸிங்காகர்ஷிதகம், உத்ருத்தம், உபசிருதகம், தலஸங்கட்டிதம், ஜநிதம், அவகித்தகம், நிவேசம், ஏலகாக்கிரீடிதம், ஊருத்விருத்தம், மதஸ்கலிதம், விஷ்ணுக்கிராந்தம், ஸம்ப்ராந்தம், விஷ்கம்பம், உத்கட்டிதம், விருஷபக்கிரீடிதம், லோலிதம், நாகாபஸர்ப்பிதம், சகடாஸ்யம், கங்காவதரணம்.
ஆண்கள் ஆடும்போது “தாண்டவம்’ என்றும், பெண்கள் ஆடும்போது “லாஸ்யம்’ என்றும் அழைக்கப்படுகின்ற இந்த ஆடல்களை பரமேஸ்வரன் நவராத்திரி ஒன்பது நாட்களிலும் ஒன்பது வகையாக ஆடுகிறார்.
இவரது ஆட்டத்தின்போது வரையப்படும் கோலங்களிலிருந்து ஒவ்வொரு தேவியாக வெவ்வேறு பெயருடன் நவதுர்க்கையாக வெளிப்படுகிறாள் அம்பிகை.