ரவி மோகன், ஆர்த்தி ரவி ஜோடியின் பிரிவுக்குப் பின்னால் பாடகி கெனிஷா இருப்பது தற்போது ஊரறிந்த ரகசியமாகியுள்ளது.

மேலும் கெனிஷா உடன் ரவி மோகன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில் ரவி மோகனைப் பிரிய அந்த மூன்றாவது நபரே காரணம் என்று ஆர்த்தி ரவி-யும் கடந்த சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார்.

இதையடுத்து பாடகியும், தெரபிஸ்டுமான கெனிஷா பிரான்சிஸ் மீதான விமர்சனங்கள் அதிகரிக்கத் துவங்கியதை அடுத்து அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவனின் படத்துடன் கடவுளிடம் முறையிட்டிருக்கிறார்.

“நான் உங்களுக்கு நம்பிக்கையை அளித்தேன், நீங்கள் தான் எனக்கான பாதையைத் தேர்ந்தெடுத்தீர்கள்.

வலியையும் வேதனையையும் என்னுடன் அனுபவித்த உண்மையை அறிந்தவர்கள் உள்ளிட்ட அனைவரையும் உன்னிடம் சமர்ப்பிக்கிறேன்.

உண்மையை வெளிக்கொணருங்கள், ஆண்டவரே, என் பரிமாணத்தில் – நான் தவறு செய்திருந்தால், என்னை எரிக்கவும் அல்லது உங்களிடம் அழைத்துச் செல்லவும். நான் சரணடைகிறேன். ஓம் நமசிவாய” என்று உருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.