டெல்லி: வன்முறை நடைபெற்ற சம்பல் பகுதிக்கு செல்ல முயன்றி மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் வாகனங்கள்  உத்தரப் பிரதேச எல்லையில்  மாநில காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

உ.பி. மாநிலத்தில் பதற்றத்தை தனிக்கும் வகையில் அரசியல் பிரதிநிதிகள், சமூக அமைப்புகள் உள்பட வெளிஆள்கள் நுழைய சம்பல் மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அங்கு  செல்ல முயன்ற  எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். லோக்சபா லோபி மற்றும் எம்.பி.க்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி-மீரட் விரைவு சாலையில் காஜிபூர் எல்லையில் நிறுத்தப்பட்டனர்.

சம்பல் மாவட்டத்தில் வெளி ஆள்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், வன்முறை பகுதியை ஆய்வு செய்ய சென்ற ராகுல் காந்தியை தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் கடந்த நவம்பர் 19ஆம் தேதி மசூதியில் ஹரிஹர் கோவில் இருப்பதாக ஒரு மனுவைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் முதன்முதலில் ஆய்வு செய்யப்பட்டபோது சம்பலில் பதற்றம் நிலவியது. மசூதிக்கு அருகே ஏராளமான மக்கள் கூடி, ஆய்வுக் குழு மீண்டும் பணியைத் தொடங்கியபோது கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். அப்போது பாதுகாப்புப் படை வீரர்களுடன் மோதலில் ஈடுபட்ட அவர்கள், வாகனங்களை எரித்தும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர். மேலும் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து அங்கு வெளியாட்கள் செல்ல மாவட்ட  நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், அங்கு செல்ல முயன்ற ராகுல்காந்தி, பிரியங்கா காந்தியின் கார்கள் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.