லண்டன்:

லண்டன் தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது என்று இங்கிலாந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

லண்டனில் உள்ள கிரன்பெல் டவர் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த வாரம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்து விட்டனர் என்று தகவல் வெளியானது.

இதன் பின்னர் 58 பலியானதாக தெரிவிக்கப்பட்டது. தீ விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் சோதனை செய்து வரும் போலீசார் இன்று வெளியிட்டுள்ள தகவலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.