டெல்லி: 18வது மக்களவைக்கான லோக்சபா தேர்தலில் இன்று 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், காலை 11 மணி நிலவரப்படி 23.66% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்து உள்ளன. இன்று 5வது கட்ட தேர்தல், நாடு முழுவதும் 8 மாநிலங்களைச் சேர்ந்த 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்றைய தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு தொடங்கிய நிலையில், இன்று காலை 9 மணி வரை 10.28% வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 23.66% வாக்குப்பதிவாகியுள்ளது ற்குவங்கத்தில் அதிகபட்சமாகவும், மகாராஷ்டிராவில் குறைவாகவும் வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது.உத்தரப்பிரதேசம்: 27.76%
மகாராஷ்டிரா: 15.93%
மேற்குவங்கம்: 32.07%
பிஹார்: 21.11%
ஒடிசா: 21.07%
ஜார்க்கண்ட்: 26.18%
ஜம்மு காஷ்மீர்: 21.37%
லடாக்: 27.87% என வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது.