டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்.பிர்லா நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது பதவி நீக்க தீர்மானம் தொடர்பாக மக்களவையில் சபாநாயகர் விளக்கம் அளித்தார். நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய 146 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாக கூறிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா , உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை மக்களவை அறிவித்தார்.
அதன்படி, இந்த 3 பேர் கொண்ட குழுவின் உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்தர் மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா ஆகியோர் அடங்குவர். இந்த குழு நீதிபதி யஷ்வந் மீதான குற்றச்சாட்டு குறித்து, விசாரித்து, தனது அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கும். விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை இந்த திட்டம் நிலுவையில் இருக்கும்” என்று கூறினார்.