டில்லி:

டைபெற்று முடிந்த 17வது மக்களவைக்கான தேர்தலில் நாடு முழுவதும் வெற்றி பெற்று மக்களவையை அலங்கரிக்க வரும் 542 எம்.பிக்களில் 197 பேர் கடந்த முறையும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மக்களவையை அலங்கரித்தவர்கள். இவர்களில் 27 பேர் பெண்கள்.

17வது மக்களவைக்கான தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. 543 தொகுதிகளை கொண்ட மக்களவைக்கு, வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் 542 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், 303 இடங்களை கைப்பற்றி பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.

இந்த நிலையில், தற்போது தேர்வாகி உள்ள எம்.பி.க்களில் 197 பேர் கடந்த முறையும் தேர்வானர் கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது. அதில் பாஜகவைசேர்ந்த நிதின் கட்காரி, கிரண் ரெஜிஜு, ஜூவல் ஓரம், ராதாமோகன் சிங், பாபுல் சுப்ரியோ உள்பட 145 பேர் மீண்டும் தேர்வாகி உள்ளனர்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.பி.கக்ள 12 பேர் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 2 பேர், லோக்ஜனசக்தி எம்.பி.க்கள் 3 பேரும் மீண்டும் வெற்றி பெற்று மக்களவைக்கு தேர்வாகி உள்ளனர். அதுபோல டில்லியில் 5 எம்.பி.க்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 2 பேர், ஒய்எஸ்ஆர் கட்சியை சேர்ந்த 2 பேர்  மீண்டும் தேர்வாகி உள்ளனர். இவ்வாறு மீண்டும் தேர்வனா எம்.பி.க்களில் 27 பேர் பெண் எம்.பி.க்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.