டில்லி,
ஊழக்கு எதிரான லோக் பால் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று காந்தி நினைவிடத்தில் அண்ணா ஹசாரே போராட்டத்தை தொடங்கி உள்ளார்.
காந்தி பிறந்த நாளான இன்று டில்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே ஊழக்கு எதிரான லோக்பால் சட்டத்தை உடனே மோடி தலைமையிலான அரசு நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டத்தை தொடங்கி உள்ளார்.
லோக்பால் சட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக அண்ணா ஹசாரே பிரதமர் மோடிக்கு கடந்த மார்ச் மாதம் எச்சரிக்கை விடுத்து கடிதம் எழுதியிருந்தார். அதில், தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் லோக்பால் சட்டத்தில் உள்ள குறைகள் நீக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துவிடும் என அனைவரையும் போல் நானும் நம்பினேன். அது நடைபெறவில்லை. அதனால் ஏமாற்றம் அடைந்ததாக கூறியிருந்தார்.
இதுவரை 30 கடிதங்கள் பிரதமருக்கு அண்ணா ஹசாரே எழுதியிருக்கிறார். கடந்த ஆகஸ்டு மாதம் எழுதிய கடிதத்தில் மத்திய அரசின் ஊழலை கண்டித்தும், லோக் பால் சட்டத்தை நிறைவேற்ற கோரியும் காந்தி பிறந்தநாள் அன்று மீண்டும் போராட்டத்தை தொடங்க போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தால்.
ஆனால் எந்தவொரு பதிலும் இல்லாததால், .மத்திய அரசில் மலிந்து கிடக்கும் ஊழலுக்கு எதிராகவும் வலுவான லோக் பால் சட்டத்தை நிறைவேற்ற கோரியும் அண்ணா ஹாசாரே இன்று போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
டில்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் லோக் பால் சட்டத்தை வலியுறுத்தி அண்ணா ஹசாரே போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
இதன் காரணமாக மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.