டில்லி:
உ.பி. மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதமர் மோடி, நாளை தனது தாயாரை சந்தித்து ஆசி பெறும் நிலையில், நாளை மறுதினம் வாரணாசி சென்று தன்னை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க இருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் உ.பி. மாநிலம் வாரணாசி தொகுதியில் பாஜக வேட்பாளராக பிரதமர் மோடி மீண்டும் களமிறங்கினார். அவரை எதிர்த்து பிரியங்கா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அஜராய் களமிறக்கப்பட்டார். இதன் காரணமாக மோடியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
இந்தநிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற மோடி 674664 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அஜய்ராய் 152456 வாக்குகள் பெற்றுள்ளார். மோடி 522116 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்படுகிறார்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை(மே 26) குஜராத் சென்று தனது தாய் ஹீரா பென்னிடம் ஆசி பெறுகிறார். அதையடுத்து, நாளை மறுநாள், காசிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.