டெல்லி
சபாநாயகர் ஓம் பிர்லா வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயண மக்களவை சபாநாயகர் ஓம் பி1ர்லா ம் செல்ல உள்ளார்.
யுனைடெட் கிங்டம், ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு, 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். யுனைடெட் கிங்டமின் நாடாளுமன்ற சபாநாயகர் லிண்ட்சே ஹாயில் அழைப்பின்பேரில் 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை அந்நாட்டில் பிர்லா சுற்றுப்பயணம் செய்வ்ழ்தற்காக அவர் புதுடெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
ஓம் பிர்லா தனது பயணத்தில், லிண்ட்சே மற்றும் பிரபுக்கள் சபையின் தலைவர் மெக்பால் ஆகியோரை லண்டன் நகரில் சந்தித்து பேச உள்ளார். மேலும் லண்டனில் அம்பேத்கர் மியூசியத்திற்கு செல்லும் அவர், மகாத்மா காந்தி சிலைக்கு மலரஞ்சலி செலுத்துவதுடன், இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து உரையாட உள்ளார்.
பிறகு, ஸ்காட்லாந்துக்கு சென்று அங்கிருந்து, குவென்சேவில் 10-ந்தேதி நடைபெற உள்ள காமன்வெல்த் அமைப்பின் சபாநாயகர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளின் மாநாட்டுக்கான (சி.எஸ்.பி.ஓ.சி.) நிலைக்குழு கூட்டத்திற்கு பிர்லா தலைமையேற்கிறார் .வ ரும் 2026-ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற உள்ள 28-வது சி.எஸ்.பி.ஓ.சி. மாநாடஒ முன்னிட்டு நடைபெறவுள்ள இந்த நிலைக்குழு கூட்டத்தில் பிர்லா தலைமையேற்க உள்ளார்.