சென்னை: லோக்சபா தேர்தல் வாக்கு கண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான   என்டிஏ கூட்டணியை  நெருங்கியே  இண்டியா கூட்டணியும் தொடர்ந்து வருகிறது. இதனால், ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்படும் வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

18வது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வெற்றிபெறுவோம் என பாஜக கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியும் கூறி வரும் நிலையில், மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்ற எதிர்பார்பப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

2024க்கான வாக்கு எண்ணிக்கை இன்று  காலை 8 மணிக்கு தொடங்கியது. 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 542 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தலைவிதி இன்று தீர்மானிக்கப்படுகிறது. முதலில் தபால் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து, எட்டு முப்பது மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 542 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தலைவிதி இன்று தீர்மானிக்கப்படுகிறது.  543 இடங்களைக் கொண்ட மக்களவையில், 272 தொகுகளை பெற்ற கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும். இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி 273 தொகுதிகளிலும், இண்டியா கூட்டணி 230 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன. 

இண்டியா கூட்டணியின் முன்னிலை விகிதம் மணிக்கு மணி  அதிகரித்து வருவதால், மத்தியில்  ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்படும் வாய்ப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் தொங்கு பாராளுமன்றம் அமைய வாய்ப்பு ஏற்படலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். 

 

என்பது ஒரு கட்சி அல்லது கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க கடக்க வேண்டிய பாதியாகும். இருப்பினும்,