சென்னை:

மிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்பட 8 மாநிலங்களை சேர்ந்த 59 லோக்சபா தொகுதிகளில் நாட்டு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முன்னதாக நேற்ற மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வுபெற்றது.

17வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே . 6 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. 7-வது இறுதிக்கட்ட தேர்தல் நாளை (ஞாயிற்றுக்கிழமை – மே 19) நடக்கிறது.

பீகாரில் 8, ஜார்கண்டில் 3, சண்டிகாரில் 1, இமாசலபிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, பஞ்சாப்பில் மொத்தம் உள்ள 13, உத்தரபிரதேசத்தில் 13, மேற்கு வங்காளத்தில் 9 என மொத்தம் 59 தொகுதிகளில் நாளை  இறுதிக்கட்டதேர்தல் நடக்கிறது.

அத்துடன் தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர்,  திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியும் அடங்கி உள்ளது.

நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. 7-வது இறுதிக்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்ததும், மாலை 6 மணிக்கு பின்னர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓட்டு எண்ணிக்கை 23-ந் தேதி நடைபெறும். அன்று மாலையில் மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார் என தெரியவந்து விடும்.