டெல்லி: 18வது மக்களவைக்கான 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட மற்றும் 7வது கட்ட தேர்தல் நாளை (ஜுன் 1ந்தேதி) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உள்பட 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்குச்சாவடி களுக்கு வாக்குப்பெட்டிகள், அலுவலர்கள் அனுப்பி வைக்கும்பணி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. முதல்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உள்பட, அருணாச்சல பிரதேசம், அசாம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 89 தொகுதிகளில் ஏப்ரல் 26ஆம் தேதியும், 94 தொகுதிகளில் மே 7 ஆம் தேதி மூன்றாம் கட்டமும், மே 13 ஆம் தேதி, 96 மக்களவைத் தொகுதிகளில் நான்காம் கட்டமாகவும் வாக்குகள் பதிவாகின 6 ஆவது கட்ட வாக்குப்பதிவின்போது, 57 மக்களவைத் தொகுதிகளில் 63 புள்ளி 37விழுக்காடு வாக்குகளும் பதிவாகின.
இதைத்தொடர்ந்து, இறுதி மற்றும் 7வது கட்ட வாக்குப்பதிவு இமாச்சல பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், மேற்குவங்கம், உ.பி. உள்பட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 57 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை நடைபெற இருக்கிறது. இதனுடன் ஒடிசாவில் 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவும் நடைபெற இருக்கிறது.
7வது கட்ட தேர்தல் நடைபெறும், உத்தரப் பிரதேசம், பீகார், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஒடிசா, மேற்கு வங்காளம், ஜார்கண்ட் மற்றும் சண்டிகர் ஆகிய எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் 907 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுட்ளளது.
நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் முக்கியமானது பிரதமர் மோடி போட்டியிடும், வாரணாசி தொகுதி அடங்கும். மேலும், இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கங்கனா ரனாவத்தும், பாட்னா சாஹிப் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்தும் தேர்தலை சந்திக்க உள்ளனர்.
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு போட்டியாக காங்கிரஸின் அஜய் ராய் களமிறக்கப்பட்டுள்ளார். கங்கனாவுக்கு எதிராக விக்ரமாதித்திய சிங்கை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. ரவிசங்கர் பிரசாத்துக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் முன்னாள் மக்களவைத் தலைவர் மீரா குமாரின் மகன் அன்சுல் அவிஜித் போட்டியிடுகிறார். பிகாரின் பாடலிபுத்ரா தொகுதியில் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பார்தி போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பாஜக ராம் கிரிபால் யாதவை நிறுத்தியுள்ளது. இமாச்சல பிரதேசத்தின் ஹிமீர்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் களம்காண்கிறார். அவர் அவருக்கு போட்டியாக சத்பல் சிங்கை காங்கிரஸ் இறக்கியுள்ளது. இதேபோல் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா பாரமுல்லா தொகுதியில் களம் காண்கிறார்.
இந்த 58 தொகுதிகளிலும் நேற்று (மே 30ந்தேதி) மாலையுடன் பிரசாரம் ஓய்வடைந்த நிலையில், நாளை (ஜூன் 1ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து, வரும் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன.
தேர்தலை முன்னிட்டு, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், வாக்குப்பதிவு நேரத்தில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களும் மூடப்பட்டிருக்கும். சனிக்கிழமை என்பதால் சில தொகுதிகளில் வங்கிகளும் மூடப்பட்டிருக்கும். 57 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நேரத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டு வணிக ரீதியிலான மதுபானங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
7வது மற்றும் இறுதிக் கட்ட தேர்தல்: 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இன்று மாலையும் பிரசாரம் ஓய்வு…