டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், எஸ்ஐஆர் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை முடங்கியது. இதையடுத்து, அவை பகல் 2மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் 19ம் தேதி வரை 15 அமர்வுகளாக நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்றி பல முக்கிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்து விவாதம் நடத்தாவிட்டால் அவை முடங்குவதற்கு ஒன்றிய அரசே பொறுப்பு என எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், இன்று அவை கூடியதும், வழக்கமான தொடக்க நிகழ்வுகளுக்கு பிறகு, ராஜ்யசபா தலைவர் சி.பி.ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி உள்பட அனைத்து கட்சியினரும் பாராட்டு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அவை நடவடிக்கைளை தொடர்ந்து. அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எஸ்ஐஆர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கோஷம் எழுப்பி அவை நடவடிக்கைகளை முடக்கினார். இதனால், முதலில் 12மணி வரை முடங்கிய அவைகள், மீண்டும் தொடர்ந்த கூச்சலால் பிற்பகல் 3மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.