டெல்லி:  பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியது. வழக்கமான அலுவல் பணிகள் முடிவடைந்ததும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தங்களத கோரிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என கோஷம் எழுப்பியதால், அவையை பகல் 12மணி வரை  சபாநாயகர் ஓம்.பிர்லா ஒத்தி வைத்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இன்று தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.  இதற்கிடையில், எதிர்க்கட்சகிள் வாக்காளர் பட்டியல் திருத்தம், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

இந்த நிலையில், காலை 11 மணிக்கு அவை வழக்கமான நடைமுறைகளுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டன. இதனால், அவர்களை கடிந்துகொண்ட அவைத்தலைவர் ஓம்பிர்லா அவையை 12 மணி வரை வைத்தார்.

முன்னதாக அவையில் பேசிய பிர்லா, சபையில் விவாதிக்கப்பட்டது குறித்து,  “நீங்கள் நோட்டீஸ் கொடுக்க வேண்டும், எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், கேள்வி நேரத்திற்குப் பிறகு அது விவாதிக்கப்படும்.

சபை முதல் நாளில் செயல்பட வேண்டும், நல்ல விவாதம் நடக்க வேண்டும். ஒவ்வொரு எம்.பி.க்கும் சரியான நேரத்தையும் வாய்ப்பையும் நான் வழங்குவேன்… சபை செயல்பட வேண்டும். நீங்கள் இங்கு கோஷங்களை எழுப்ப வரவில்லை என்று கூறியவர்,   சபை விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி செயல்படுகிறது. விதிகளின்படி எழுப்பப்படும் அனைத்து பிரச்சினைகளும் விவாதிக்கப்படும் என்று கூறினார். ஆனால், அதை ஏற்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மறுத்த நிலையில், அவை 12மணி வரை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.