லக்னோ: நாடு முழுவதும் இன்று 5வது கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரேபரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான, ராகுல்காந்தி, அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

நாடு முழுவதும் இன்று உ.பி., காஷ்மீர்  8 மாநிலங்களைச் சேர்ந்த 48 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த ரேபரேலி தொகுதி வேட்பாளர் ராகுல்காந்தி,

இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு!

முதல் நான்கு கட்டங்களிலேயே அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் காக்க மக்கள் எழுந்து நின்று பாஜகவை தோற்கடிக்கிறார்கள் என்பது தெளிவாகிவிட்டது. வெறுப்பு அரசியலால் சலித்துப் போன இந்த நாடு இப்போது தன் சொந்தப் பிரச்சினைகளில் வாக்களிக்கின்றது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, விவசாயிகளுக்கு MSP மற்றும் கடனில் இருந்து விடுதலை, பெண்கள் பொருளாதார சார்பு மற்றும் பாதுகாப்பு மற்றும் நியாயமான கூலிக்கு தொழிலாளர்கள். இந்தியாவுடன் இணைந்து மக்களே இந்தத் தேர்தலில் போராடுகிறார்கள், நாடு முழுவதும் மாற்றத்தின் புயல் வீசுகிறது.

அமேதி மற்றும் ரேபரேலி உட்பட முழு நாட்டிற்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன் – வெளியே வந்து உங்கள் குடும்பங்களின் செழிப்புக்காகவும், உங்கள் சொந்த உரிமைகளுக்காகவும், இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவும் அதிக எண்ணிக்கையில் வாக்களியுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து,  ரேபரேலி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.  முன்னதாக இன்று காலை டெல்லியில் இருந்து லக்னோ  விமான நிலையத்துக்கு வருகைதந்த ராகுல் காந்தி, சாலை வழியாக ரேபரேலிக்கு சென்றார்.  போகும் வழியில் உள்ள ஹனுமன் கோயிலில் தரிசனம் செய்த ராகுல் காந்தி, அந்த பகுதியில் உள்ள மகாத்மா காந்தி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையத்தில் ஆய்வு செய்தார். தொடர்ந்து,  தொடர்ந்து, ரேபரேலி தொகுதிக்குள்பட்ட சில வாக்குச் சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.