நியூயார்க்:

எஃப் 16 ரக விமானத்தை இந்திய விமானப் படையின் பழைய மிக்-21 சுட்டு வீழ்த்தியதாக அறிவித்த இந்தியாவுக்கு எதிராக, வழக்கு தொடரப் போவதாக பாகிஸ்தான் நாளேடுகளில் வெளியான செய்தி பொய்யானது என லோக்கீட் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.


அமெரிக்க பாதுகாப்புத் துறையின் மேஜர் லோக்கீட் மார்ட்டின் எஃப்16 ரக விமானத்தை தயாரித்தவர்.
இந்திய ராணுவ தளத்தை தகர்க்க பாகிஸ்தானிலிருந்து வந்த எஃப் 16 ரக விமானத்தை, மிக்-21 ரக ஏவுகணை தாங்கிய விமானத்தில் இருந்தவாறு விங் கமாண்டர் அபினந்தன் சுட்டு வீழ்த்தினார்.

அப்போது அவர் இருந்த மிக் 21 ரக விமானமும் கீழே விழுந்து நொறுங்கியது.

இந்நிலையில், பாகிஸ்தான் பத்திரிகைகளில் வெளியான செய்தியில், பழைய மிக்-21 ரக விமானத்தை வைத்துக் கொண்டே, எஃப்-16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இந்தியா அறிவித்துள்ளது.

இதனையடுத்து, இந்தியா மீது அமெரிக்க பாதுகாப்பு மேஜர் லோக்கீட் மார்ட்டின் வழக்கு தொடரப்போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தியை உயர் அதிகாரி ஒருவரும் பகிர்ந்திருந்தார்.

இதற்கிடையே, தாம் இந்தியா மீது வழக்கு தொடரப்போவதாக பாகிஸ்தான் பத்திரிகைகளில் வெளியான செய்தியை லோக்கீட் மார்ட்டின் மறுத்துள்ளார். இந்த செய்திகள் பொய்யானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.