மும்பை: மகாராஷ்டிராவில் பீட் மாவட்டத்தில் மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல் 4 வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டு வருகிறது. பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந் நிலையில் அம்மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் தொற்று பாதிப்பை கட்டுக்குள் வைக்க மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அறிவிக்கபட்டுள்ளது.
பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், உணவகங்கள் உள்ளிட்டவை மூட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேசமயம் அத்யாவசிய சேவைகளுக்கு பொது முடக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.