இம்பால்
மணிப்பூர் மாநிலத்தில் ஜூலை 15 முதல் ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் பிரேன் சிங் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி நாடெங்கும் மார்ச் 25 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அது மேலும் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஊரடங்கு ஜூன் 30 ஆம் தேதி முடிவடையும் வேளையில் பல மாநிலங்களில் கொரோனா பதிப்பு அதிகரித்து வருகிறது.
மத்திய அரசு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை. ஆயினும் மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்துள்ளன. அவ்வரிசையில் மணிப்பூர் மாநிலமும் சேர்ந்துள்ளது. அங்கும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங். “கொரோனா பாதிப்பு மணிப்பூரில் அதிகரித்து வருகிறது. எனவே வரும் ஜூலை 15 ஆம் தேதி வரை மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் இதுவரை 1185 பாதிக்கப்பட்டு அதில் 455 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 730 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மாநிலத்தில் கொரோனாவால் இதுவரை ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.