ஐதராபாத்:

ப்லிகி ஜமாத்தில் கலந்துகொண்டவர்கள் மற்றும் வெளிநாட்டினரை தனது அலுவலகத்தில் பதுக்கி வைத்திருந்தாக,  ஐதராபாத் தப்லிகி ஜமாத் தலைவர் கைது செய்யப்பட்டார். அவரது அலுவலகத்தில் பதுங்கியிருந்த வெளிநாட்டினர் உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

லைநகர் டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமியர்களின் தப்லிகி ஜமாத் மாநாடு காரணமாக இந்தியாவில் கொரோனா தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த மாநாட்டில் கலந்துகொண்ட 40 பேர் ஐதராபாத்தில் பதுங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.

அவர்களை காவல்துறையினர் கைது செய்து, கொரோனா சோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இது தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக அனைந்து மாநிலங்களும் உஷார்படுத்தப் பட்ட நிலையில், டெல்லியில், இஸ்லாமியர்கள் கலந்துகொண்ட தப்லிஜி மார்க்காஸ் மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்ட நிலையில்,  நாடு முழுவதும் இருந்து சுமார் 8,000 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா நோய்த்தோற்று, வெளிநாட்டு விருந்தினர்கள் மூலம் பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அவர்களை அடையாளம் காணும் பணி முடுக்கி விடப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையில், இந்த மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டினர் பலர்  நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் பதுங்கி இருந்து வருவது வெளியாகி வருகிறது. தமிழகத்தில் அதுபோல பதுங்கியிருந்த வெளிநாடைச்சேர்ந்த பல இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தெலுங்கானா மாநிலத்திலும், ஏராளமானோர் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாநிலமாக இருப்பதாக முதல்வர் சந்திரசேகராவ் கடந்த மாதம் உறுதியாக தெரிவித்திருந்த நிலையில், டெல்லி இமாம் தப்லிஜி மார்க்காஸ் மாநாட்டில் கலந்துகொண்ட 2 பேர் திடீரென மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அங்கு கொரோனா பாதிப்பு கடுமையாக இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.

டெல்லி மாநாட்டுக்கு போய் ஹைதராபாத்தில் பதுங்கியிருந்த 40 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தெலுங்கானா மாநில  மாநில சுகாதார அமைச்சரின் கூற்றுப்படி, கொரானா பாசிட்டிவ் நோயாளிகளில் 85 சதவீதம் பேர் நிஜாமுதீன் மாநாட்டுக்கு டெல்லி போய்  வந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதுவரை 16 நோயாளிகள் இறந்துள்ளார்கள்.