சென்னை

ரும் 15 ஆம் தேதி அன்று மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்ளூரி விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மயிலாடுதுறை மாவட்டம் துலாக்கட்டத்தில் காவிரி ஆற்றின் கரைகளில் ஐப்பசி மாதம் நடைபெறும் துலா உற்சவத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி கரைகளில் புனித நீராடி செல்வது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான ஐப்பசி மாதம் துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் வரும் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவ. 23 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.