சென்னை:
தமிழகத்தில் கடந்த 27ந்தேதி நடைபெற்ற முதல்கட்ட ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்ட 30 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழகத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன் படி முதற்கட்டதேர்தல் கடந்த 27-ஆம் தேதியும் ,இரண்டாம் கட்ட நேற்று ம்(30ந்தேதியும்) நடைபெற்றது.
கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின் போது தேர்தலில் வாக்குச்சீட்டை மாற்றி வழங்குதல், சின்னங்களை மாற்றி அச்சடித்தல், வாக்குப்பெட்டிகள் எரித்தல் போன்ற பல புகார்கள் எழுந்ததது. இந்த நிலையில், பிரச்சினைக் குரிய வகையில் வாக்குப்பதிவு நடைபெற்ற 30 தொகுதிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 15-வது வார்டுக்கு உட்பட்ட கோங்குடிப்பட்டி, பேராம்பூர், பாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 13 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.