சென்னை:

மிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவித்துள்ள நிலையில், நேற்று முதல்நாள் மட்டும்  3,217 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி களுக்கு மட்டும் தேர்தல் நடைபெற உள்ளது. புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் நடைபெறவில்லை.இதற்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளத.

இந்த நிலையில், நேற்று ஊரக உள்ளாட்சிகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளான நேற்று மட்டும்  3,217 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

அதன்படி, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் – 2,834, கிராம ஊராட்சி தலைவர் – 333, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் – 47 , மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் – 3 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்  டிசம்பர் 15 ஆம் தேதி

டிசம்பர் 17 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை

.டிசம்பர் 19 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள்