சென்னை:
தமிழகம் முழுவதும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விடுமுறை விடப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுவமாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைத்து மாவட்டங்களிலும் எல்கேஜி யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை என தமிழக அரசு நேற்று அறிவித்தது. அத்துடன், கேரள எல்லைப்பகுதிகளைச் சேர்ந்த, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் மாவட்டங்களிலும் ஆரம்ப பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று திடீர் திருப்பமாக தமிழகத்தில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள், பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம் என பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனால் பெற்றோர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.