டெல்லி
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி அப்பல்லோ மருத்துவமனையி எல் கே அத்வானி அனுமதிகப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் முதல் வாரத்தில் உடல்நலக்குறைவு காரணமாக பாஜக மூத்த தலைவரும். இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல் கே அத்வானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்
மீண்டும் கடந்த ஜூன் மாதம் இறுதியில் உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பாடார், இன்று அத்வானிக்கு மீண்டும் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
எனவே அவர் உடனடியாக சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்வானி அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த நரம்பியல் மருத்துவர் வினித் சூரியின் மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.